Friday, March 23, 2007

மனச்சிறகு - மு.மேத்தா

மனச்சிறகு - மு.மேத்தா

நூல் - மனச்சிறகு (கவிதை தொகுப்பு)
ஆசிரியர் - மு. மேத்தா
முதற்பதிப்பு - 1978

1978ம் ஆண்டு ‘மனச்சிறகு’ முதற்பதிப்பிற்கு ஆசிரியர் எழுதிய முன்னுரையில் எனை கவர்ந்த வரிகள் :

"கவிதை எப்போதும் கவிதைதான். அதில் புதிது பழையது இல்லை. கவிதையாக இருந்தால் அது ஒரு போதும் பழையதாவதில்லை"

"மரபுக் கவிதையோ புதுக் கவிதையோ எதுவாக இருந்தாலும் அதில் கவிதை இருக்கவேண்டும் என்பதுதான் இன்றியமையாதது.

படகு ஒழுங்காகப் போய்க்கொண்டிருந்தால்தான் - அதில் பயணம் செய்யும் நாம் - விருப்பம் போல வலையை வீசிப் பார்க்கலாம்."

"இறுதியாக நான் சொல்லிக் கொள்வது இதுதான்: என் பழைய வறுகளுக்காக நான் புதிதாக வருத்தப்பட வேண்டியதில்லை - அவை தவறுகளாக இருந்தால். என்னுடைய பழைய சாதனைகளுக்காக நான் புதிதாகவும் மகிழ்ச்சி கொள்ளலாம் - அவை சாதனைகளாக இருந்தால்."

இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை ‘வரலாறு’.

வரலாறு

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி மெய்யென ஆக்கிப்
புகன்றிடும் மூலங்கள்!

இக்கவிதை முற்றிலும் புதிய கோணமாக தோன்றிற்று. அதனாலேயே பிடித்தும்போயிற்று. கடந்து போன நூற்றாண்டுகளில் நாம் எத்தனை ஆயிரம் மனிதர்களை இப்படி அறியாமல் இழந்தோமோ தெரியவில்லை. ஏடுகளில்
வெளிவந்த சரித்திரம் படைத்த மனிதர்களை பற்றியே நாம் முழுவதுமாக அறிந்திருக்கவில்லை. பெயர்கள் வெளிவராத மனிதர்களை பற்றிச்சொல்லவும் வேணுமா. இப்படி விடுபட்ட உன்னத மனிதர்களை பற்றி யாராவது
விவரங்கள் சேகரிக்க முயற்சி செய்து பின்னாளில் உலகிற்கு அறியத்தந்ததுண்டா. அப்படி வெளிவந்த புத்தகங்களின் விவரங்கள் அறிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

"ஆயிரங்கோடி மனிதரில் ஒருசிலர் அடைகிற பிரபலங்கல், பல ஆயிரமாயிரம் பெயரை மறைத்திடும் அற்புதப் புதைகுழிகள்" - அவ்வரிகளை முழுமையாக ஒப்புக்கொள்ளமுடிந்தாலும் ‘சரித்திரம் என்பது விளம்பர மனிதரின் சாகச முத்திரைகள்’ என்று மொத்தமாக சாடுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக அரசு இவருக்கு வழங்கிய விருதுகள் :
இக்குறிப்புகள் ‘மனச்சிறகு’ புத்தகத்தின் பின்னட்டையிலிருந்து சுட்டது
பாவேந்தர் பாரதிதாசன் விருது (1986)
கலைமாமணி விருது (1997)
சிறந்த பாடலாசிரியருக்கான திரைப்பட வித்தகர் விருது - கண்ணதாசன் விருது (1998)

இவருடைய முதல் கவிதை தொகுப்பு - ‘கண்ணீர்ப் பூக்கள்’
- நதியல

2 comments:

லக்கிலுக் said...

இன்று (29-3-07) மாலை 5.00 மணியளவில் மு.மேத்தா நடுவராக, சென்னை காமராஜர் அரங்கத்தில் இளைஞர் எழுச்சிநாள் சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது.

golden bangla 24 said...

Hi,
Very nice post, impressive. its quite different from other posts. Thanks for sharing. plz visit our sites.
New Tamil Sex Stories
Tamil porn stories
Tamil Sex Stories
Tamil Sex Stories
tamil kamakathaikal
Tamil hot sex story