Friday, March 23, 2007

மேத்தா பற்றி..

தமிழ்நாட்டிலிருந்து லண்டன் வந்திருந்த கவிஞர் மேத்தா இங்குள்ள Ceei tv என்னும் தொலைகாட்சி மூலம் முலம் நேரடியாக நேயர்களுடன் இன்று கலந்துரையாடினார்.

கவிதை, திரைப்பாடல் என்ற இரண்டு தண்டவாளங்களிலும் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இளைப்பாறாமல் ஓடிக்கொண்டிருக்கிற இலக்கிய ரயில் மு. மேத்தா!

தேகமழை நானாகும்
தேதியைத் தேடுவேன்
ஈரவயல் நீயாக
மேனியை மூடுவேன்.

என்று உருகி உருகி நெகிழ்கிற இந்தக் கவிஞர், ஒரு கல்லூரிப் பேராசிரியர்.
''சிறு வயதில் சினிமா பெரிய கனவு. வீட்டில் அழுது அடம்பிடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களைக் கொட்டக் கொட்டக் கண்விழித்துப் பார்த்திருக்கிறேன். பிற்பாடு தீவிர இலக்கியத்தில் நுழைந்து கவிதையில் புகழ்பெற்ற பிறகு, சினிமா ஆசை போய்விட்டது.

ஆனால், சினிமாவில் பாட்டு எழுதுபவர்கள்தான் இன்று கவிஞர்கள் என்று அறியப்படுகிற சூழ்நிலையில், நண்பர்கள் என்னை சினிமாவை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு பாடல் வாய்ப்பு என் வீடு தேடிவந்தது'' என்று சிரித்தபடி பழைய நினைவுகளில் மூழ்குகிறார்.

''அப்போ நாடக உலகில் பிரபலமாயிருந்த உடையப்பா என்பவர் 'அனிச்சமலர்' என்`றாரு படம் தயாரித்தார். வருடைய மகன் சுப்பிரமணியம் என் கல்லூரி நண்பர். என் கவிதைகளைப் படித்திருந்த உடையப்பா, அவரது படத்தில் நான் ஒரு பாடல் எழுத வேண்டுமென்று விரும்பி, என்னை சங்கர்-கணேஷிடம் அறிமுகப்படுத்தினார். சுற்றிலும் சினிமாக்காரர்கள். முற்றிலும் அறிமுக மாகாத சூழ்நிலை. பாடல் எழுத சரியான பயிற்சியில்லாத நான் சங்கர்- கணேஷ் தந்த அந்த மெட்டை என் தமிழால் தட்டுத்தடுமாறி தடவிப் பார்த்தேன்.

அதுதான் -

காத்து வீசுது புது காத்து வீசுது
இங்கே
கதிர்கள்கூட வயல்வரப்பில்
காதல் பேசுது

என்ற எனது முதல் பாடல். அந்தப் படம் ஓடவில்லை. எனது பாடலும் பிரபலமாகவில்லை.

அதற்குப் பிறகு பாட்டெதுவும் எழுதாமல் விலகியிருந்த என்னைத் திரும்பவும் சினிமாவுக்குள் அழைத்தவர் கமல்ஹாசன்தான். கமலும் பாலகுமாரனும்தான் என்னை மனோபாலாவிடம் அறிமுகப்படுத் தினார்கள். மனோபாலா
மூலமாக இளையராஜாவின் நட்பு கிடைத்தது. என் வாழ்க்கையின் திருப்புமுனை அது.

ரஜினி நடித்த 'வேலைக்காரன்' படத்தில் ஆறு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்குத் தந்தார் இளைய ராஜா.

பக்கத்து வீட்டுக்காரன் முகம் கூட தெரியாத இந்த நகரத்து மனிதர்களின் அவசர வாழ்க்கையும், மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அரசியல் சுயநலமும் என்னை எப்போதும் ரணப்படுத்துகிற விஷயம், அதுதான்...


சிங்காரமா ஊரு... இது
சென்னையின்னு பேரு
ஊரச் சுத்தி ஓடுதையா
கூவம் ஆறு!
கட்சிகளும் வாங்கி இங்கே
கட்டிடங்கள் வெச்சிருக்கு
கஷ்டப்படும் ஏழைக்கெல்லாம்
கட்டாந்தரை தானிருக்கு.

என்று என்னை எழுத வைத்தது. அதே படத்தில் 'வா.. வா.. வா... கண்ணா வா'ன்னு ஒரு காதல் பாடல். மென்மையான அந்தப் பாட்டில் அழுத்தமாக ஒரு விஷயம் சொல்ல ஆசைப்பட்டேன்.

காளிதாசன் காண வேண்டும்
காவியங்கள் சொல்லுவான்
கம்பநாடன் உன்னைக் கண்டால்

2 comments:

கார்மேகராஜா said...

nice

Assignment Help in Australia said...

Online Assignment Writing Service from Anywhere in Australia
Hire our online assignment writers are accessible to students from anywhere in Australia
https://www.shopproessay.com